--- --:--:-- --

ஏழைத் தொழிலாளர்கள் பயன்படட்டும்..! கொரோனா நிவாரண உதவியை வேண்டாம் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அறிவிக்க வலியுறுத்தல்!!

images

ஏழைத் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில்,10 லட்சம் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தமிழக அறிவித்துள்ள கொரோனா நிவாரண தொகை மற்றும் ரேசன் பொருட்களை வேண்டாம் என பதிவிடுமாறு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

இது தொடர்பாக இந்த கூட்டமைப்பின் நிறுவன தலைவர் சா.அருணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வருகின்ற 31ம்தேதி வரை தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் நிவாரண உதவியாக தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் ரூ 1000 ரொக்கமும், அதே போன்று அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்கள்,ஆட்டோ ஓட்டுநர் குடும்பங்களுக்கு மேலும் ரூ.1000 வழங்கவும்,100 நாள் திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு இரண்டுநாள் ஊதியம் சேர்த்து வழங்கவும், அதே போன்று நியாய விலை கடைகளில் 20 கிலோ அரசி 1 கிலோ சர்க்கரை , 1 கிலோ பருப்பு இலவசமாக வழங்க அறிவித்திருப்பதை பாராட்டி நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன் .

இதே போல் கொரோனா வைரஸ் தடுப்பு மருத்துவப் பணியில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணி செய்யும் மருத்துவர்கள் செவிலியர், மருத்துவம் சார்ந்த ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுக்கு ஒரு மாதம் சிறப்பு ஊதியம் வழங்கியதையும் பாராட்டி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

கொரோனா நிவாரணமாக அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு பிடித்தம் செய்து பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.

 

அதே போன்று, முதலமைச்சர் சட்டப்பேரவையில்110 விதியின் கீழ் நிவாரணம் குறித்து அறிவிக்கும்போது நிவாரணம் பெற விரும்பாதவர்கள் இணையதளத்தில் தங்களுக்கு நிவாரணம் வேண்டாமென பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளதை பின்பற்றி, 10 லட்சம் அரசு ஊழியர்க நம், ஆசிரியர்களும் ஏழை கூலித் தொழிலாளர்களுக்கு மேலும் உதவும் பொருட்டு நிவாரணத் தொகை ரூ.1000 மற்றும் ரேசன் பொருட்கள் வேண்டாம் என இணையத்தில் தெரிவிக்க வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் என
சா.அருணன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon