--- --:--:-- --

ஜி-20 மாநாட்டை ரத்து செய்துவிட்டு தெலுங்கானா சென்ற தமிழிசை

7

துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஜி 20 நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு தெலுங்கானா புறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி சின்ன வீராம்பட்டினத்தில் இன்று இரவு நடைபெறும் ஜி20 மாநாடு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழிசை இன்று ஹைதராபாத்திலிருந்து புதுச்சேரி வந்தார்.

 

இந்த நிலையில் அவருக்கு அடுத்த மாதம் தெலுங்கானாவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பான அவசர அழைப்பு வந்தது. நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு விரைவாக தமிழிசை மீண்டும் விமான மூலம் ஹைதராபாத் புறப்பட்டார்.

 

கடந்த முறை தெலுங்கானா சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தமிழிசைய உரையாற்ற தெலுங்கானா அரசு அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon