--- --:--:-- --

குடிசையே இல்லாத தமிழ்நாடு: கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் உரை

6

கிராம சபைக் கூட்டங்கள் ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை உணர வைக்கும் தருணம். கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்தில் பங்கேற்க உரிய உரிமைகளை அளிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். அதற்காகத்தான் ஆண்டுதோறும் 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

 

கிராமங்களின் தேவைகள், வளர்ச்சி இலக்குகள், நலன் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் விழா. குடியிருப்பு, சாலை, நெருக்கடிகளில் சாதிப் பெயர்களை நீக்கி பொதுப் பெயர்களை வைக்க நடவடிக்கை.

 

கிராம சபையில் மக்கள் ஆலோசித்து 3 முக்கிய தேவைகளைத் தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். குடிசையே இல்லாத தமிழ்நாடு இலக்கை எட்ட இதுவரை 99,453 வீடுகள் கட்டிக் முடிக்கப்பட்டு வழங்கப்பட்டன.

Right Menu Icon