--- --:--:-- --

பெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக தாக்கிய தமிழக வெற்றி கழக நிர்வாகி..!

2

சென்னை அடுத்த திருநீர் மலையில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய இளங்கோ என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். அந்த பங்கில் அவ்வப்பொழுது தனது ஏடிஎம் கார்டை ஸ்வைப் செய்து 200 ரூபாய் 300 ரூபாய் என பணம் வாங்கி செல்வது இளங்கோவின் வழக்கம் என்று கூறப்படுகிறது.

 

பத்தாயிரம் ரூபாய் பணம் கேட்டதாக கூறப்படும் நிலையில் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்றும் கணக்கை முடித்து உரிமையாளரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளங்கோ அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon