டெல்லியில் திடீர் நில அதிர்வு..!
தலைநகர் டெல்லியில் சில நொடிகள் ஏற்பட்ட நில நடுக்கத்தால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர்.டெல்லி மற்றும் புறநகர் பகுதியான நொய்டாவில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவு கோளில் 4.0 ஆக பதிவான நில நடுக்கம் சில நொடிகள் உணரப்பட்டதால் அச்சமடைந்த மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்நிலையில் டெல்லி மாநில காங்கிரஸ் நிர்வாகி அல்கா லம்பா மற்றும் பாஜக நிர்வாகியான டஜிந்தர் பக்கா ஆகியோர் தங்கள் எக்ஸ் பக்கத்தில் நில நடுக்கம் குறித்து கருத்து பதிவிட்டுள்ளனர்.மேலும் மற்றொரு நபர் நில அதிர்வின்போது தனது வீட்டின் சிசிடிவி காட்சிகளை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




