தினசரி கொரொனா பாதிப்பில் தமிழகம் முதலிடம்..!
இந்திய அளவில் கொரொனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து நான்காவது நாளாக முதலிடம் வகிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 209 பேர் புதிதாக கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்களில் 78 சதவீத புதிய பாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழகத்தில் 36 ஆயிரத்து 184 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் தினசரி பாதிப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
தமிழகத்திற்கு அடுத்தபடியாக கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிகளவிலான தினசரி பாதிப்புள்ளது. தினசரி இந்திய அளவில் தொடர்ந்து நான்காவது நாளாக தமிழகம் முதலிடத்தில் இருப்பது மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.




