--- --:--:-- --

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் அனுப்பர்பாளையம் புதூரில் கிளை அலுவலகம் திறப்பு.. மாநில நிர்வாகிகள் பங்கேற்பு..!

10

மிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனித நேய மக்கள் கட்சி சார்பில் அனுப்பர்பாளையம் புதூர் கிளை அலுவலக திறப்பு விழா அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையம் அருகில் நடந்தது. விழாவுக்கு த.மு.மு.க கிளை செயலாளர் பஷீர் அகமது தலைமை தாங்கினார்.

 

திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் நசீர்தீன், த.மு.மு.க கிளை செயலாளர் முஸ்தாக் அஹ்மத், ம.ம.க கிளை செயலாளர் அப்துல் ஹக்கீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜம் ஜம் சையத் அப்பாஸ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மனித நேய மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கோவை உமர் கிளை அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார்.

 

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில பொருளாளர் கோவை சாகுல் ஹமீது சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். முடிவில் கிளை பொருளாளர் ஜான் பாட்சா நன்றி கூறினார். விழாவில் அப்பகுதியை சேர்ந்த த.மு.மு.க மற்றும் ம.ம.க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 

படம் : மனித நேய மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கோவை உமர் அனுப்பர்பாளையம் புதூர் கிளை அலுவலகத்தை திறந்து வைத்த போது எடுத்தப்படம். அருகில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில பொருளாளர் கோவை சாகுல் ஹமீது மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் உள்ளனர்.

Right Menu Icon