மகனின் கடனை அடைக்க முடியாததால் தம்பதியர் தற்கொலை..!
கன்னியாகுமரி மாவட்ட மணவாளக்குறிச்சியில் மகனின் கடனை அடைக்க முடியாததால் தம்பதி இருவர் தற்கொலை செய்து கொண்டனர். ஆறுமுகம் – பிரேமலதா தம்பதியினருக்கு இரு மகன்கள் உள்ளனர்.
இதில் ஒரு மகன் கொரோனா தொற்று காலத்தில் பெரும் நஷ்டத்தை சந்தித்ததால் நிறைய கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தந்தையிடம் உதவி கேட்ட நிலையில் சரியான நேரத்தில் பணத்தினை கொடுத்து உதவ முடியாததால் மனம் உடைந்த தந்தையும், தாயும் விஷமருதி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. உடல்களை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.






