டெங்கு காய்ச்சலுக்கு மூன்று வயது சிறுமி பலி..!
டெங்கு காய்ச்சலுக்கு மூன்று வயது சிறுமி உயிரிழந்தது கரூர் மக்களை சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. சிறுமிக்கு ஐந்து நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அந்த சிறுமிக்கு ரத்த வெள்ளை அணுக்கள் குறைந்ததால் கடந்த வெள்ளிக்கிழமை மாலை மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமி சிவதர்ஷினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து அந்த கிராமத்தில் டெங்கு காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க குப்பைகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறுமியின் தந்ததந்தை சிவகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.






