குடியரசுத்தலைவர் தமிழகம் வருகை குறித்து தமிழக முதல்வர் ஆலோசனை..!
குடியரசுத் தலைவரின் தமிழக வருகையை ஒட்டி நிகழ்வுகளுக்கு முன்னேற்பாடுகளும் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
கருணாநிதி உருவப்படம் சட்டப்பேரவையில் திறப்பு, சுதந்திரதினத்தில் அடிக்கல் நாட்டுதல் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள குடியரசுத் தலைவர் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி தமிழகம் வருகிறார்.
இதையடுத்து மாலை 6 மணிக்கு முதலமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் தலைமை செயலாளர் டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.







