சென்னை மேயர் பொறுப்புக்கு உதயநிதி ஸ்டாலின் பெயரில் ஆதரவாளர்கள் விருப்ப மனு
உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகர மேயர் பொறுப்புக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பெயரில் அவரது ஆதரவாளர்கள் விருப்ப மனு அளித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் திமுக மாவட்ட அலுவலகங்களில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இதில் சென்னை மேற்கு மாவட்ட அலுவலகத்தில் சென்னை மாநகர மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் பெயரில் மாவட்ட செயலாளர் அன்பழகனிடம் விருப்ப மனு அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஆதரவாளர்கள் திமுகவினர் மேயராக இருந்தபோது பல்வேறு மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டதாக கூறினார்.





