இன்று மாலை தரையிறங்குகிறார் சுபான்ஷு சுக்லா..!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் மூலம் சுபான்ஷு சுக்லா நேற்று மாலை பூமிக்கு புறப்பட்டார். இந்திய நேரப்படி இன்று பகல் 2.53 மணியளவில் டிராகன் விண்கலத்தில் உள்ள 2 சிறிய ‘டுரோக்’ பாராசூட்டுகள் பூமிக்கு மேல் சுமார் 5.5 கிலோ மீட்டர் உயரத்தில் கலிபோர்னியா கடலின் மேல் பகுதியில் திறக்கும்.
இது விண்கலத்தை 156 கிலோ மீட்டர் வேகத்தில் இருந்து 53 கிலோ மீட்டர் வேகமாகக் குறைக்கும். பின்னர், 4 பெரிய பாராசூட்டுகள் விரிந்து, டிராகனின் வேகத்தை 7 கிலோ மீட்டராக குறையும். பகல் 3 மணிக்கு டிராகன் பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கடற்கரையில் பத்திரமாக தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





