கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் வீச்சு..!
சேலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை மீது கருப்பு பெயிண்ட் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்தில் திமுகவினர் குவிந்ததால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. நள்ளிரவில் இச்சம்பவம் நடந்துள்ளதால், அந்த மர்ம நபர்கள் யார் என்று அடையாளம் காணமுடியவில்லை. சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






