--- --:--:-- --

கோவையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை; குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸ் 7 தனிப்படைகள் அமைப்பு

10

கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள பகுதியில் இரவு 11 மணி அளவில் காரில் ஆண் நண்பருடன் கல்லூரி மாணவி பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த 3 பேர் ஆண் நண்பரை தாக்கிவிட்டு மாணவியைத் தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர்.

 

ஆண் நண்பர் அளித்த தகவலின்பேரில் அதிகாலை 4 மணி அளவில் காவல்துறை மாணவியை மீட்டனர். மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் 7 தனிப்படைகளை அமைத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon