பட்டப் பகலில் விசிக பிரமுகர் வெட்டிக்கொலை..!
திருவாரூர் அருகே பட்டப்பகலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் அக்கரை நடுத்தெருவை சேர்ந்தவர் விசிக பிரமுகர் கவியரசன்.
இருசக்கர வாகனத்தில் வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் கவியரசனை வழிமறித்து சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து கவியரசன் உடலை கைப்பற்றி காவல்துறையினர் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





