ஒரு சிலருக்கு இந்த வெற்றியை தாங்க முடியவில்லை எனக்கூறிய ஸ்டாலின்..!
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பணத்தை எடுத்து வரவில்லை என்றும் தமிழக தமிழர்களின் மனதை எடுத்து வந்திருப்பதாகவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின் அபுதாபி வாழ் தமிழர்கள் மத்தியில் உரையாற்றினார். ஆசியாவின் சிறந்த மாநிலமாக மாற்றுவதற்கு முயற்சித்துக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
துபாயின் புர்ஜ் கலீபா கட்டிடத்தில் செம்மொழித்தமிழ் இருப்பது பெருமை அளிப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார். தமிழ்நாட்டின் முதலீடுகளை ஈர்க்கும் பயணமாக மட்டுமின்றி தமிழர்களின் மனங்களில் இருக்கும் பயணமாகவும் இது அமைந்து இருப்பதாக கூறினார்.






