நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மீது நடிகர் சூரி புகார்..!
ஓய்வுபெற்ற டிஜிபியும், நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் மீது பண மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் சூரி காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
நிலம் வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக முன்னாள் டிஜிபி ரமேஷ் மீது நடிகர் சூரி அளித்த புகாரை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றி ஆறு மாதத்திற்குள் விசாரணை முடிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகம் வந்த நடிகர் சூரி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.






