வருண் குறித்து கோபத்துடன் வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் அக்ஷரா..!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நண்பர்களாக மாறியவர்கள் நடிகர் வருண் மற்றும் அக்ஷரா. பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளர்களாக களமிறங்கிய இவ்விருவரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒன்றாகவே வீட்டை விட்டு வெளியேறினார்கள்.
இதுமட்டுமின்றி வீட்டிற்குள் வருண் மற்றும் அக்ஷரா இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், நாங்கள் இருவரும் நண்பர்கள் தான், என்று கூறி சரியான பதிலடி கொடுத்தனர்.
இந்நிலையில், வருண் குறித்து கோபத்துடன் வீடியோ ஒன்றை அக்ஷரா வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவில் ” ஹோலி பண்டிகைக்காக வருண் செய்த வேலையை பாருங்க என்று தலைமுடியை காட்டுகிறார். கலர்கலராக அவருடைய தலைமுடி முழுவதும் இருக்கிறது.
இரவில் வாக்கிங் செல்லலாம் என்று கூட்டிட்டு போய் சாயாம் அடித்து விட்டான் வருண். எவ்வளவு நேரம் வாஷ் செய்தாலும் போகவில்லை. அதே போல், என் காரில் இருக்கும் கலரும் போகவில்லை. இதற்காக வருணை பழிவாங்குவேன். I hate you வருண் ” என்று கூறியுள்ளார்.






