நவ.29-ல் இந்தியா வரும் இலங்கை அதிபர் கோத்தபயா
இலங்கை அதிபராக பதவி ஏற்றிருக்கும் கோத்தபய ராஜபக்சே வரும் 29ஆம் தேதி இந்தியாவிற்கு வருகை தர உள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை அதிபராக பொறுப்பேற்றிருக்கும் கோத்தபய ராஜபக்ஷவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது கோத்தபாய ராஜபக்ச இந்தியாவிற்கு வருகை தர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருப்பது குறித்து ஜெய்சங்கர் கூறினார். இதனையடுத்து பிரதமரின் அழைப்பை ஏற்று வரும் 29 ஆம் தேதி இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்தியாவிற்கு வர உள்ளார் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார்.





