தீபாவளியை முன்னிட்டு இந்த ஊர்களுக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் மற்றும் மானாமதுரைக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று பகல் 3.45 மணிக்கு ஏ.சி. சிறப்பு ரயில் புறப்படுகிறது.
மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு நாளை காலை 8.45 மணிக்கு ரயில் புறப்படுகிறது. திருச்சி, மதுரை மற்றும் நெல்லை வழியாக இயக்கப்படும் இந்த சிறப்பு ரயிலில் 14 ஏ.சி. பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன.
இதேபோன்று தாம்பரத்தில் இருந்து மானாமதுரைக்கு இன்று மாலை 5 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. மறுமார்க்கத்தில் நாளை பகல் 11.45 மணிக்கு சிறப்பு ரயில் மானாமதுரையில் இருந்து தாம்பரத்திற்கு புறப்படுகிறது. விழுப்புரம், கடலூர், திருவாரூர், பட்டுக்கோட்டை வழியாக இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.
இதில் படுக்கை வசதி கொண்ட 12 ரயில் பெட்டிகளும், ஏ.சி.வசதி கொண்ட 3 ரயில் பெட்டிகளும் இணைக்கப்பட்டு உள்ளன. 3 முன்பதிவில்லா பொதுப் பெட்டிகளும் இருக்கும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.





