--- --:--:-- --

கணவன் தினமும் குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுவதாக ராஜ்கிரனின் மகள் குற்றச்சாட்டு..!

4

டிகர் ராஜ்கிரன் மகள் ஜீனத் ப்ரியா தனது கணவரும் சீரியல் நடிகருமான முனீஸ் ராஜாவை பிரிந்து விட்டதாக வீடியோ வெளியிட்டு இருந்தார். தன்னிடம் இருந்து மனைவி பிரிந்து சென்றதற்கு ராஜ்கிரன் தான் காரணம் என்று முனீஸ் ராஜா குறை கூறியிருந்தார்.

 

இந்த நிலையில் தற்பொழுது பேட்டி அளித்திருக்கும் ஜீனத் பிரியா முனீஸ் ராஜா குறித்து பல அதிர்ச்சி தகவல்களை கூறி இருக்கிறார். தினமும் இரவு குடித்துவிட்டு வந்து தன்னை கடுமையாக தாக்கியதாகவும் 10 கோடி ரூபாய் வரை பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.

 

மேலும் தன்னை விட்டுப் பிரிந்து சென்ற தனது தாயார் பெயரையும், தன்னை வளர்த்த தந்தை ராஜ்கிரன் பெயரையும் அசிங்கப்படுத்துவதற்காக மிகக் கேவலமாக பேசி வருவதாகவும் பிரியா குற்றம் சாட்டியுள்ளார். கணவனிடம் செருப்படி வாங்கிய பிறகு தான் தந்தை ராஜ்கிரனின் அன்பை புரிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon