--- --:--:-- --

மது அருந்த பணம் தராத தந்தையை மகனே அடித்துக் கொலை..!

9

ள்ளக்குறிச்சியில் மது அருந்த பணம் தராத தந்தையை மகனே அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி அருகே முடியனுர் கிராமத்தை சேர்ந்தவர் தவசு. 65 வயது கூலித் தொழிலாளியான இவரிடம் இவரது மகன் ஜெயராமன் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

 

இதில் பணம் தர மறுத்த தந்தையை ஜெயராமன் சரமாரியாக தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார். இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்த இருந்த போலீசார் முதியவரின் மகன் ஜெயராமனை கைது செய்துள்ளனர்.

 

Right Menu Icon