--- --:--:-- --

உயிருடன் இருக்கும் தாயை சுடுகாட்டில் விட்டுச் சென்ற மகன், மகள்..!

6

டல்நிலை பாதிக்கப்பட்ட தனது தாயை மகன் மற்றும் குடும்பத்தினர் சுடுகாட்டில் விட்டுச் சென்ற அதிர்ச்சி சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. குண்டூர் மாவட்டத்தில் 70 வயது மூதாட்டிக்கு மகன், மகள் ஆகியோர் உள்ளனர்.

 

மூன்று நாட்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த மூதாட்டியை அவருடைய மகன், மருமகள் ஆகியோர் அடித்து துன்புறுத்தி ஆட்டோவில் அழைத்து வந்து சுடுகாடு அருகே அனாதையாக விட்டு சென்று விட்டனர். அந்த பகுதியில் வந்த நகராட்சி ஊழியர்கள் மூதாட்டி அனாதையாக படுத்து இருப்பதை பார்த்தவர்கள் அவர்களிடம் நடந்த சம்பவம் பற்றி விசாரித்தனர்.

 

தகவல் அடிப்படையில் விரைந்து சென்ற அதிகாரிகள் மூதாட்டியை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இனிமேல் இதுபோல் நடந்தால் கடமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

 

Right Menu Icon