--- --:--:-- --

பொதுமக்களுக்கு இராணுவ வீரர்கள் உதவி !

6

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகமே நிலைகுலைந்து நிற்கிறது. இந்த வைரஸை அழிக்க நேரடியாக மருந்துகள் இல்லாததால், சமூக விலகல் மட்டுமே தீர்வாக இருக்கிறது. அதனால் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை அறிவித்துள்ளன.

 

இந்த ஊரடங்கால் அன்றாடம் உழைத்துச் சாப்பிடும் தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், நாடோடிகள், பழங்குடி மக்கள் மிகப்பெரும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அன்றாட உணவே அவர்களுக்குக் கேள்விக்குறியாகியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள திட்டங்கள் இந்த மக்களைப் பெரிய அளவில் சென்றுசேரவில்லை.

இந்நிலையில் சமூக ஆர்வலர்கள் பல்வேறு இடங்களில் தங்களின் பணியை சிறப்பாக செய்துவருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பகுதியில் உள்ள சன்னதிப்புதுக்குளம், கங்கையம்மன் குடியிருப்பு பகுதியில் உள்ள ஏழைய குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 100 நபர்களுக்கு இராணுவ வீரர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினர்.

ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் தொகுப்பை மருத்துவர்கள் மற்றும் மானாமதுரை டி.எஸ்.பி., கார்த்திகேயன் வழங்கினர். நிவாரண பொருட்களை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் அன்றாட உணவிற்கு கஷ்டப்படும் எங்களுக்கு நீங்கள் செய்யும் உதவியை எங்கள் வாழ்வில் என்றும் மறக்க மாட்டோம் என்று வைகை பட்டாளம் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply

Right Menu Icon