--- --:--:-- --

புழல் ஏரியின் கரையில் மண்ணரிப்பு..!

4

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியின் சுற்றுச்சுவரில் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளதால் கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

மிக்ஜாம் புயல் பாதிப்பு, கன மழையால் 3,300 மில்லியன் கன அடி நீர் கொண்ட புழல் நிரம்பி வழிகிறது. கடந்த 4ம் தேதி ஏரிக்கரையில் உள்ள காவல்துறை கண்காணிப்பு கட்டிடத்தில் தடுப்பு சுவர் இடிந்து சேதமானது.

 

மழை, காற்று பழைய கட்டிடம் என்பதாலும் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பதாலும் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து கரையின் மேலே தண்ணீர் வடிந்து சுற்றுச்சுவரை மோதியதால் மண்ணரிப்பு ஏற்பட்டு சுற்றுச்சுவரின் ஒரு பகுதி கீழே சரிந்து விழுந்ததும் அதன் வழியே தண்ணீர் வெளியேறியது.

 

சாலையில் தொடர்ச்சியாக தண்ணீர் சென்றதால் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளது. சுற்றுச்சுவர் சேதம் அடைந்ததால் கரை வலுவாக உள்ளதா என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

 

Right Menu Icon