--- --:--:-- --

சமூக ஆர்வலர் முகிலன் நீதி மன்றத்தில் ஆஜரானார்

000

ஜல்லிக்கட்டு வழக்கில் சமூக ஆர்வலர் முகிலன் நீதி மன்றத்தில் ஆஜரானார். தமிழகத்தில் ஜல்லிக் கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்தும் அனுமதி வழங்கக் கோரியும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. இதேபோல் மதுரை மாவட்டம் அலங் காநல்லூர் பாலமேடு உள்ளிட்ட பகுதிகளிலும் நடந்தது.

 

அலங்காநல்லூரில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டது, பொது சொத்துக்களை சேதப்படுத்தியது உள்ளிட்ட புகார்களின் பேரில் சமூக ஆர்வலர் முகிலன் உள்ளிட்ட 64 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது 64 பேரில் ஒருவர் இறந்து விட்டார் . இவர் போக மீதமுள்ளவர்கள் மீதான வழக்கின் விசாரணை மதுரை ஜேஎம் 4 நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

 

ஏற்கனவே இந்த வழக்கு விசாரணை யின் போது முகிலன் உள்ளிட்ட பலருக்கு தனித்தனியாக 450 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்தி ரிக்கை நகல் வழங்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு மதுரை ஜேஎம் 4 நீதி மன்றத் தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முகிலன் உள்ளிட்ட 21பேர் ஆஜராகினர் . இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை பிப்.25க்கு தள்ளி வைக்கப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon