--- --:--:-- --

ராமநாதபுரத்தில் சுங்கச் சாவடிகளை அப்புறப் படுத்த வலியுறுத்தி மாட்டு வண்டியில் பயணம் செய்த பா ம க கட்சியினர்

ராமநாதபுரத்தில் சுங்கச் சாவடிகளை அப்புறப் படுத்த வலியுறுத்தி மாட்டு வண்டியில் பயணம் செய்த பா ம க கட்சியினர்

பொதுமக்களின் கொள்ளை மையங்களாக செயல்படும் சுங்கச்சாவடிகளை அப்புறப்படுத்த வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினர் மாட்டு வண்டி பயணம் மேற்கொண்டனர்.

 

ராமநாதபுரம் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சை.அக்கிம் தலைமை ஏற்க, மாவட்ட தலைவர் ஜீவா, மாவட்ட பொருளாளர் ஆயிஷா, மாநில மாணவரணி சங்க செயலாளர் அம்ஜத் கான் ஆகியோர் முன்னிலையில் கட்சிப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். மாட்டு வண்டி பயணம் மூலம் போகலூர் சுங்கச்சாவடி கட்டணமின்றி பயணம் மேற்கொண்டனர்.

பாட்டாளி மக்கள் கட்சியினர் மாட்டுவண்டி மீது அமர்ந்து கோஷங்கள் எழுப்பி துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். போகலூர் ஒன்றியத்தில் உள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கச்சாவடிகளில் நடத்தப்படும் கொள்ளைகளில் பொது மக்கள் தப்பித்து கொள்ள மாட்டுவண்டி, குதிரை வண்டி பயணமே சிறந்தது என பொதுமக்களுக்கு உணர்த்தும் விதமாக விழிப்புணர்வு மாட்டுவண்டிப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

 

சுங்கச்சாவடி கொள்ளைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளிடம் வழங்கினார். கீழக்கரை நகர் செயலாளர் லோகநாதன், கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி, ஒன்றிய தலைவர் காளிமுத்து , கீழக்கரை நகர் தலைவர் அப்துல் லத்தீப், ராமநாதபுரம் நகர் பொறுப்பாளர் தாரிக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon