வெயில் காரணமாக வீடுகளுக்குள் படையெடுக்கும் பாம்புகள்..!
கோடை காலம் தொடங்கி விட்டதாலும், வெயிலின் தாக்கத்தாலும் கடலூரில், மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு பாம்புகள் படையெடுப்பு தொடங்கி விட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கோடை கால வெப்பம் வாட்ட தொடங்கி விட்டது.
இதனால் பாம்புகள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வருவது வழக்கம். அந்த வகையில் கடலில் இன்று ஒரே நாளில் நிலப்பகுதியில் உள்ள பேருந்து பணிமனையில் பழுது பார்ப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் பாம்பு ஒன்று புகுந்தது. அதைப் போன்று திருப்பாதிரிப்புலியூர் தேரடி வீதியில் வீட்டில் உள்ள கீழ்ப்பகுதியில் பாம்பு ஒன்று புகுந்தது.
அந்த வரிசையில் நேரு நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குளிர்சாதன பெட்டியில் பாம்பு அடைக்கலமானதாக தகவல் அறிந்து அங்கு வந்த பாம்பு பிடிக்கும் ஆர்வலரான செல்லம் என்பவர் அனைத்து பாம்புகளையும் லாவகமாக பிடித்து பாதுகாப்பாக காட்டுப் பகுதியில் சென்றுவிட்டார்.





