அரசிடம் தோனியின் மனைவி அதிரடி கேள்வி..!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மின் நெருக்கடி பிரச்சனை நிலவுவது ஏன் என பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்ஷி கேள்வி எழுப்பியுள்ளார். நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டு மின்வெட்டு நிலவி வருகிறது.
இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் பல வருடங்களாக மின்வெட்டு பிரச்சினை இருந்து வருகிறது. இது குறித்து பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்ஷி ஜார்கண்ட் அரசுக்கு டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில் ஜார்கண்டின் வரி செலுத்துபவராக பல ஆண்டுகளாக இங்கு மின் நெருக்கடி பிரச்சனை ஏன் உள்ளது என்பதை அறிய விரும்புகிறேன். நாங்கள் எங்கள் பங்கை சரியாக செய்து வருவதன் மூலம் மின் ஆற்றலை சேமித்து வருகிறோம் என பதிவிட்டுள்ளார். இது அந்த மாநிலத்தில் மட்டுமல்லாது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





