இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பு..!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருசக்கர வாகனத்தில் நல்ல பாம்பு புகுந்ததால் வாகன ஓட்டி அச்சமடைந்தார். வந்தவாசி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை உணவகம் எதிரில் வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
அப்போது வேகமாக வந்த பாம்பு ஒன்று மோட்டார் சைக்கிளில் புகுந்தது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு வாகனத்தில் இருந்த நல்ல பாம்பை பிடித்து உள்ளனர். பின்னர் அந்த பாம்பு அருகில் உள்ள காப்பு காட்டில் விடப்பட்டது.






