7 வருட காதலி செய்த செயலால், இளைஞர் எடுத்த விபரீத முடிவு..!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே காதலித்த பெண் வேறொருவரை திருமணம் செய்ததால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். திண்டிவனம் அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் என்பவர் 7 வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இதில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க குடும்பத்தார் முடிவெடுத்தனர். அதன்படி கடந்த 23ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி அந்த பெண் வேறு ஒரு நபருடன் சென்று திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த குமரேசனின் பெற்றோர் உடனடியாக உறவினர் பெண்ணை அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணமாகி மூன்று நாட்கள் ஆன நிலையில் குமரேசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலின்பேரில் வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குமரேசன் இறப்பதற்கு முன்பாக பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. அதில் காதலித்த பெண்ணை மறக்க முடியாததால் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.






