பாம்பு கடிபட்டவர் மூடநம்பிக்கையால் ஆற்றுக்குள் இறந்த சோகம்..!
பாம்பு கடிக்கு ஆளான இளைஞருக்கு விஷம் இறங்குவதற்காக கங்கை ஆற்றில் இரண்டு நாட்கள் வைத்திருந்த அவலம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
புலாம் சகர் பகுதியைச் சேர்ந்த மோகித் என்ற இளைஞர் கல்லூரியில் படித்தவர். தேர்தலில் ஓட்டு போட தனது சொந்த கிராமத்திற்கு சென்ற மோகித் அங்குள்ள வயல் வெளியில் நடந்து சென்றுள்ளார். அவரை பாம்பு கடித்த நிலையில் அருகில் இருந்தோர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க செய்தனர்.
ஆனால் அந்த சிகிச்சையில் நம்பிக்கை இல்லாததால் கங்கை ஆற்றில் உடலை வைத்திருந்தால் விஷம் இறங்கும் என சிலர் கூறியதால் அவ்வாறு செய்தனர். உடலை கயிறு கட்டி ஆற்றில் வைத்திருந்த நிலையில் அவர் இறந்து போனது இரண்டு நாட்களுக்கு பின்பு தெரிய வந்தது.





