பிரபல இசையமைப்பாளர் பிரவீன் குமார் திடீர் மரணம்..!
கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான மேதகு படத்திற்கு இசையமைத்து கவனம் ஈர்த்தவர் பிரவீன் குமார். இரக்கதன் என்கிற படத்துக்கும் இசையமைத்துள்ளார். பிரவீன் குமாரின் இசையில் ஒரு தனித்துவம் இருப்பதாகவும் தமிழ் சினிமாவில் அவர் பெரிய இடத்திற்கு செல்வார் என்றும் கருதப்பட்டது.
இந்நிலையில் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட பிரவீன்குமார் கடந்த சில மாதங்களாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனை தொடர்ந்து நேற்று மே ஒன்றாம் தேதி ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் மரணம் அடைந்தார்.
சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று பல கனவுகளை சுமந்து இருந்த பிரவீன் குமாருக்கு வயது 28 மட்டுமே என்பது பலருக்கு அதிர்ச்சியை தருகிறது.





