திருப்பூரில் ஆறு வயதான வடமாநில சிறுவன் மாயம்..!
திருப்பூரில் ஆறு வயதான வடமாநில சிறுவன் மாயமான நிலையில் அவர்களை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மஞ்சரி இவரது மனைவி மேரி. கட்டட தொழிலாளியான இவர் திருப்பூரில் தங்கியுள்ளனர்.
இவர்கள் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர். இதனிடைய கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்ற நிலையில் குழந்தை பந்து விளையாடிக் கொண்டிருந்துள்ளான். இதில் 6 வயதான சிறுவன் ஹர்மான் மட்டும் மாயமானதாக கூறப்படுகிறது.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் விரக்தி அடைந்தவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனால் குழந்தை கடத்தப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







