7 வருடங்களுக்கு பின் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் மீரா ஜாஸ்மின்..!
திருமணத்திற்குப் பின்னர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த மீரா ஜாஸ்மின் தற்போது 7 வருடங்களுக்குப்பின் மீண்டும் நடித்து வருகிறார்.
மலையாள நடிகையான மீரா ஜாஸ்மின் கடந்த 2002ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளியான படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். சண்டக்கோழி படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
தமிழ் தவிர தெலுங்கு மலையாள படங்களிலும் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் 2014ஆம் ஆண்டு ஆனால் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்குப் பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த அவர் தற்போது ஏழு வருடங்களுக்குப் பின் மலையாள இயக்குனர் சத்தியன் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக நடிகை மீரா ஜாஸ்மின் தனது உடல் எடையை 20 கிலோ வரை குறைத்துள்ளார்.







