ஒரே நேரத்தில் 5 நாட்களுக்கான வருகை பதிவேட்டில் கையெழுத்து..!
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மாணவி ஒருவர் ஒரே நேரத்தில் ஐந்து நாட்கள் வரை வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டது தொடர்பாக விசாரிக்க 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
முதுநிலை மருத்துவம் பயிலும் அந்த மாணவி ஒரே நேரத்தில் ஐந்து நாட்களுக்கான வருகை பதிவேட்டில் கையெழுத்து வீடியோ வெளியாகியது. அந்த மாணவி ஏன் இவ்வாறு செய்தார் என விசாரிக்க மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதற்காக 9 மருத்துவப் பேராசிரியர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. வருகைப்பதிவேடு முறைகேடு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சம்பந்தப்பட்ட மாணவிக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை முதல்வர், துணை முதல்வர் மற்றும் விசாரணை கமிட்டி நபர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர்.





