தண்டவாளத்தில் நின்ற பசுவிற்காக ரயிலை நிறுத்தி உயிர் கொடுத்த ஓட்டுனர்.!
மதுரையில் தண்டவாளத்தின் குறுக்கிட்ட பசு மாட்டின் மீது மோதாமல் தவிர்க்க ரயில் என்ஜினை நிறுத்திய ஓட்டுனர் கீழே இறங்கி சென்று மாட்டை அப்புறப்படுத்தி விட்டு பின்னர் ரயிலை ஓட்டி சென்றார். மதுரை போடிநாயக்கனுர் இரயில் பாதை பணி நிறைவடைந்த நிலையில் அவ்வப்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
காலை வழக்கம்போல் மதுரையில் இருந்து தேனி நோக்கி சோதனை ஓட்டத்தில் சென்று கொண்டிருந்தது. கண்காணிப்பு ரயில்வே கேட் அருகே பசுமாடு ஒன்று தண்டவாளத்தை கடக்க முயன்றது. இதனை தூரத்தில் பார்த்து விட்டு ரயிலின் வேகத்தை குறைத்து ஓட்டிச் சென்றார்.
இருப்பினும் தண்டவாளத்தை கடந்து செல்லாமல் பசுமாடு நடுவிலே நின்றதால் இன்ஜினை நிறுத்திவிட்டு விரைந்து சென்று அதனை அகற்றி விட்டு விட்டு பின்னர் ரயிலை எடுத்து சென்றார்.





