--- --:--:-- --

சித்தப்பாவையே கொலை செய்த மகன்கள்!

11

சூழ்நிலையை பயன்படுத்தி பல ஆண்டுகளாக இருந்து வந்த சொத்துச் சண்டையில் சித்தப்பாவை அடித்துக் கொன்ற மகன்களை கடலூர் போலீசார் கைது செய்துள்ளனர். 60 வயதான அய்யாக்கண்ணு சொத்துச் சண்டையில் தனது அண்ணன் மகனை அடித்துக் கொலை செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அடுத்த சிறு கம்பார் கிராமத்தை சேர்ந்தவர்கள் பெரியசாமி, அய்யாக்கண்ணு இருவரும் அண்ணன் தம்பிகள்.

 

பூர்வீக சொத்து தொடர்பாக அண்ணன் பெரிய சாமிக்கும், தம்பி அய்யாக்கண்ணு இருக்கும் 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலப்பிரச்சனை இருந்துள்ளது. இது தொடர்பான வழக்கு கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அண்ணன் பெரியசாமி மரணமடைந்தார். ஆனால் சொத்துச் சண்டை முடிவுக்கு வரவில்லை.

 

இந்நிலையில் அடிக்கடி பெரியசாமி மகன் வெங்கடேசன் என்பவனுக்கும் சித்தப்பா அய்யாக்கண்ணு மற்றும் அவரது மகன் ராமலிங்கத்திற்க்கும் அடிக்கடி நிலத்தில் பயிரிடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. கடந்த 20ஆம் தேதி அய்யாக்கண்ணு மற்றும் அவரது மகன் ராமலிங்கமும் வயலில் இருந்த வேப்ப மரத்தை வெட்டியதாக கூறப்படுகிறது.

 

இதைப் பார்த்த பெரியசாமியின் மகனான வெங்கடேசன் தனது சித்தப்பாவிடம் நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் நிலத்தில் உள்ள வேப்ப மரத்தை வெட்டியது ஏன் என கேட்டுள்ளார். இதனால் இரு தரப்பிற்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வாய் தகராறு அடிதடியாக மாறியது. வெங்கடேசனின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து அவரும் அவரது மகனையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

 

இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அய்யாக்கண்ணு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை மருத்துவமனையில் மரணமடைந்தார்.

 

அடிதடி கொலை வழக்காக பதிவு செய்த மங்கலம்பேட்டை போலீசார் வெங்கடேசன் மற்றும் அவரது உறவினர்களான ஜெயக்குமார், தினேஷ், பரமசிவம், குபேந்திரன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். ஊரடங்கு காலத்தில் சொத்து பிரச்சினையில் அண்ணன் மகனை சித்தப்பாவே கொலை செய்த சம்பவம் விருத்தாசலம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon