--- --:--:-- --

பகலில் ஷோரூம் வேலை, இரவில் வழிப்பறி

3

சென்னையில் பகலில் ஒரு வேலை பார்த்துக்கொண்டு இரவில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரவாயல் அருகே இரவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுராஜூத் என்பவரை வழிமறித்த மூன்று பேர் அவரை கத்தியால் தாக்கிவிட்டு 1,500 ரூபாயை பறித்தனர்.

 

அப்போது அவர் கூச்சலிட்டதால் அப்பகுதியில் இருந்த மக்கள் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரையும் பிடித்து சரமாரியாகத் தாக்கி காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர். விசாரணையில் அவர்கள் பூந்தமல்லியை சேர்ந்த ஜெயராஜ், யூசுப் மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

 

அவர்களிடமிருந்து கத்தி, இருசக்கர வாகனம் 2 செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தார்கள். இந்த மூன்று பேரும் பூந்தமல்லியில் உள்ள இருசக்கர வாகன விற்பனை மையத்தில் வேலை பார்த்து வருவதும், இரவில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

Leave a Reply

Right Menu Icon