--- --:--:-- --

அடித்து கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகமாடிய நண்பர் சரண்

4

நாகையில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட விவகாரத்தில் திருப்பமாக அவரது நண்பரே அடித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய தெரியவந்துள்ளது. கடந்த 14ஆம் தேதி தரங்கம்பாடி பகுதியை சேர்ந்த மணிமாறனும், அவரது நண்பரான விஸ்வநாதனும் மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.

 

இதனை மணிமாறனின் மனைவி கண்டித்துள்ளார். பின்னர் விடியற்காலை எழுந்து பார்த்தபோது மரத்தில் தூக்கில் தொங்கியபடி மணிமாறன் இறந்துகிடந்தார். தற்கொலை வழக்காக பதிவு செய்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், வழக்கின் புதிய திருப்பமாக மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மணிமாறனை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக விஸ்வநாதன் காவலர்களிடம் சரணடைந்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon