--- --:--:-- --

தனியார் மருத்துவமனைகளில் கொரொனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு..!

8

னியார் மருத்துவமனைகளில் கொரொனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு நிலையில் அது தற்காலிகமானது தான் என தமிழ் மாநில சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

 

45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி போடும் பணிகள் நாளை தொடங்கும் இருக்கும் நிலையில் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் தட்டுப்பாடு நிலவுவதாக தெரியவந்துள்ளது.

 

கார்ப்பரேட் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு கொரொனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருவதால் தனிநபர்கள் பகுதி பதிவு செய்யப்பட்டு காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள சுகாதாரத்துறை தேவையான தடுப்பு மருந்து இருப்பில் இருந்தாலும் அது குறிப்பிட்ட மையங்களுக்கு சென்றடைவதில் தாமதம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்.

 

தனியார் மருத்துவமனைகளில் கோவாக்ஸின் தடுப்பு மருந்துக்கு மட்டுமே தட்டுப்பாடு நிலவுவதாகவும் கோவிஷீல்டு மருந்து தொடர்ந்து கிடைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon