--- --:--:-- --

மின்கம்பம் நடுதல் பணியில் தமிழகத்திலேயே தேர்ச்சி பெற்ற முதல் பெண்

2

மின் வாரியத்தில் கம்பம் நடுதல், புதிய மின் பாதை அமைத்தல் உள்ளிட்ட பல பணிகளை மேற்கொள்ள முதல்முறையாக பெண் ஒருவர் உடல்தகுதி தேர்வில் தேர்வாகியுள்ளார்.

 

சேலம் மாவட்டம் மேச்சேரி அடுத்துள்ள அமரம், சேவிவளவு கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மனைவி லதா அண்மையில் நடைபெற்ற மின்வாரிய கேங்க்மேன் தேர்வில் கலந்துகொண்டார்.

 

உடல்தகுதி தேர்வில் பங்கேற்ற லதா 30 மீட்டர் உயரம் கொண்ட மின் கம்பத்தில் ஏறுவதற்கு 8 நிமிடம் ஒதுக்கப் பட்டிருந்த போதிலும் ஆறு நிமிடத்தில் ஏறி இறங்கியுள்ளார்.

 

இதேபோன்று 31.5 கிலோ எடை கொண்ட மின்சாதனங்களை தூக்கிக்கொண்டு 46 நொடியில் 100 மீட்டர் தூரத்தை கடந்த லதா உயர் அழுத்த மின் கம்பிகளை இணைக்க இரண்டு நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 1.46 நிமிடத்தில் இணைத்து அப்பணியிடத்திற்கு தேர்வாகியுள்ளார்.

 

இதையடுத்து கேங்க்மேன் தேர்வில் தமிழகத்திலேயே தேர்ச்சி பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon