ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – மோடி சீனாவுக்கு பயணம்
பிரதமர் மோடி 31-ந்தேதி சீனாவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 2019-ம் ஆண்டுக்கு பின்னர் சீனாவுக்கு பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் ஆகும். இதன்படி, சீனாவின் டியான்ஜின் நகருக்கு சென்று சேரும் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும்.
இதன்பின்னர் ஆகஸ்டு 31 மற்றும் செப்டம்படர் 1 ஆகிய நாட்களில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் பங்கேற்கும் முன்னர், அவர் ஜப்பான் நாட்டுக்கு ஆகஸ்டு 30-ந்தேதி பயணம் மேற்கொள்கிறார்.
அந்நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடா உடன் இணைந்து, இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.





