--- --:--:-- --

போதைப் பொருள் வழக்கில் ஷாருக்கான் மகன் நிரபராதி..!

4

டிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் நிரபராதி என்று போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். மும்பையில் இருந்து கோவா சென்ற கப்பலில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் போதை பொருள் வைத்திருந்ததாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் விசாரணை அதிகாரி பணம் பறிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வந்தது.

 

இந்த விசாரணையில் ஆரியன் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக எந்தவிதமான செயலிலும் ஈடுபடவில்லை என்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர் நிரபராதி என்றும் அவரிடமிருந்து போதை பொருள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon