காப்பகத்தில் இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை..!
சென்னை வியாசர்பாடியில் உள்ள காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் 18 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் தனியார் சமூக பொருளாதார கல்வி புனர்வாழ்வு சங்கம் என்ற பெயரில் சிறுமிகள் காப்பகம் செயல்பட்டு வந்தது.
இதன் இயக்குனராக கல்யாணசுந்தரம் என்பவர் இருந்து வருகிறார். இந்த காப்பகத்தில் 18 சிறுமிகள் இருந்து வந்துள்ளனர். கடந்த 24ஆம் தேதி இரவு 10 மணிக்கு 1098 தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்ட சிறுமி ஒருவர் காப்பகத்தில் இயக்குனர் கல்யாணசுந்தரம் தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை சேர்ந்தவர்கள் மட்டும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு துணை ஆணையர் தனிப்படை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று 18 சிறுமிகளை மீட்டுள்ளனர். அவர்கள் சேத்துப்பட்டில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சிறுமிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கல்யாணசுந்தரம் தலைமறைவான நிலையில் இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.






