ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு பாலியல் தொந்தரவு…!
சென்னையில் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பயிற்சி ஆசிரியரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். காணத்துர் உத்தண்டி பகுதியை சேர்ந்த தொழிலதிபரின்13 வயது மகள் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக உள்ளார்.
இதனிடையே திருவொற்றியூரை சேர்ந்த மகேஷ் என்பவர் தொழிலதிபரின் வீட்டிற்கு வந்து சிறுமிக்கு மன அழுத்தத்தை குறைப்பதற்கான பயிற்சியை அளித்து வந்துள்ளார்.
இந்த பயிற்சியின் போது மகேஷ் அத்து மீறியதாகவும் தனது மகள் சப்தம் கேட்டவுடன் தப்பி ஓடியதாகவும் அடையாறு காவல் நிலையத்தில் ஆன்லைன் வாயிலாக தொழில் அதிபர் புகார் அளித்தார் இதையடுத்து தலைமறைவாக இருந்த அவனை போலீசார் கைது செய்தனர்.







