--- --:--:-- --

கலாஷித்ரா ஆசிரியர் மீது பாலியல் புகார்- நான் எந்த புகாரையும் அளிக்கவில்லை என மாணவி புகார்..!

11

லாஷித்ரா ஆசிரியர் மீது மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்த நிலையில் திடீரென அந்த மாணவி ஆசிரியர் மீது குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை என போலீசில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

சென்னை அடையாறில் உள்ள கலாஷித்ராவின் ஆசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்து இணையத்தில் பதிவுகள் பரவிய நிலையில் இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் கையில் எடுத்தது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு டிஜிபிக்கு உத்தரவிட்ட நிலையில் இந்த புகார் மனு குறித்து விசாரிக்க சென்னை காவல் ஆணையருக்கு டிஜிபி உத்தரவிட்டார்.

 

இதனிடையே சமூக வலைதளத்தில் பரவிய புகாரில் உள்ள மாணவி போலீஸ் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் எந்த விதமான புகாரையும் தான் முன்வைக்கவில்லை எனவும் ஆசிரியை குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டு வருவதாக அவர் அளித்திருக்கும் மனுவின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon