--- --:--:-- --

சாப்பாடு செய்ய தாமதமானதால் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கணவன்..!

10

றந்தாங்கி அருகே மனைவியை எரித்துக்கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அறந்தாங்கி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சேகர்.

 

மது போதைக்கு அடிமையான இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சாப்பாடு தயார் செய்யாததால் தனது மனைவி அமிர்தவல்லியை மதுபோதையில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளார்.

 

இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் சேகருக்கு, ஆயுள் தண்டனையும் இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அபராதம் கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

 

Right Menu Icon