பல்கலைக்கழக மாணவர்கள் 210 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..!
ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரொனா தொற்று உறுதியான நிலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 210 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பல கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் இதுவரை 44 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
10 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 2,361 மாதிரிகளின் முடிவுகள் வெளிவராத நிலையில் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.







