நடிகை சித்ரா மரணம் : சக நடிகர்களிடம் விசாரணை நடத்த முடிவு..!
சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக சக நடிகர்களிடம் விசாரணை நடத்த காவல்துறை முடிவு செய்துள்ளது. சின்னத்திரை பிரபலம் சித்ரா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது வரை அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை 10 மணிக்கு பிரேத பரிசோதனை செய்யப்படுவதாக கூறப்படும் நிலையில் அது தொடர்பாக நேற்று காலை முதல் அவரது கணவர் ஹேம்நாத்திடம் விசாரணை தொடர்ந்து காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. நேற்றிரவு இன்று ஆஜராகுமாறு எழுதி வாங்கிக் கொண்டு அவரை அனுப்பிவைத்தனர் .
அதேபோல் இன்று காலை மீண்டும் அவர் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது அவரது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சக நடிகர்கள், அவருக்கு நெருக்கமாக இருந்த பல்வேறு நபர்களை அழைத்து விசாரணை நடைபெறப் போவதாகவும் காவல் துறையினர் திட்டமிட்டு இருப்பதாக காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.






